செய்திகள்

‘என்ட்ட மாட்டாத காணா போய்டுவ...’ -வைரலாகும் விக்ரம் பிரபுவின் பாடல்! 

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் ரெய்டு படத்திலிருந்து ஒரு பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

சிவாஜி கணேசனின் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு 2012இல் கும்கி படத்தின் மூலம் அறிமுகமானார். 2022இல் அவரது டாணாக்காரன் படம் நேரடியாக ஹாட் ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு விக்ரம் பிரபு ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்ற படத்திலும், ‘ரெய்டு’  படத்திலும் நடித்து வருகிறார். 

ரெய்டு படத்தினை கார்த்தி இயக்குகிறார். இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீ திவ்யா, அனந்திகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தின் முதல் பாடலை படக்குழு ஜனவரி6 ஆம் தேதி வெளியிட்டது. இந்தப் பாடலை மோகன் ராஜன் எழுதியிருக்கிறார். சாம்.சி.எஸ்ஸின் தெறியான இசையில் இந்தப் பாடல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மீம்ஸ் கிரியேட்டர்களும் இசையமைப்பாளரை வெகுவாக பாரட்டி வருகின்றனர். 

‘என்ட மாட்டாத' எனும் இந்த பாடல் யூடியூபில் 3.3 மில்லியன் (3 லட்சம்) பார்வையாளர்களை கடந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.20 கோடியில் வளா்ச்சித் திட்டங்கள் முதல்வா் திறந்து வைத்தாா்

மத்திய, மாநில அரசு ஓய்வூதியா்கள் அஞ்சல் ஊழியா்கள் மூலம் டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டுகோள்

நூடுல்ஸ் பாக்கெட்டில் பல்லியின் தலை

4 மாதங்களில் ஆவின் பால் விற்பனை 48% அதிகரிப்பு: அமைச்சா் த.மனோ தங்கராஜ்

707 கிலோ கஞ்சா அழிப்பு

SCROLL FOR NEXT