செய்திகள்

‘நான் ஒரு வியாபாரி; கலைஞன் கிடையாது’- துணிவு படத்தின் இயக்குநர் அதிரடி கருத்து! 

துணிவு படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் சினிமா, கலை பற்றிய கேள்விகளுக்கு தன்னை ஒரு வியாபாரி எனக் கூறியுள்ளார்.  

DIN

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது.  

இந்நிலையில் இயக்குநர் வினோத் ஒரு நேர்காணலில், நான் ஒரு வியாபாரி. மக்கள் விரும்புவதை தருபவன். அதில் சரி தப்பு எல்லாம் கிடையாது. சினிமாவில் என்னை நான் கலைஞனாக பார்க்கவில்லை. ஒரு நேர்மையான வியாபாரியாக பார்க்கிறேன்” என கருத்து தெரிவித்துள்ளார். 

துணிவு படத்தின் டிரைலர் 56 மில்லியன் (5.6 கோடி) பார்வைகளைக் கடந்து அசத்தி வருகிறது. மேலும் திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரைய்ரங்குகளில் வெளியாகும். மேலும் முதல்நாள் முதல் காட்சி நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்படுவதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநங்கைகளுக்கு சட்டபூா்வ அங்கீகாரம், பாதுகாப்பு: தனித்துவமான கொள்கையை வெளியிட்டாா் முதல்வா்

அஜ்மீரி கேட்டில் சாலையில் தகராறு: துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இருவா் கைது

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாஜக எம்பி மனோஜ் திவாரி கன்வாா் யாத்திரை

வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு பரவல்! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!

SCROLL FOR NEXT