படம்: அமேசான் பிரைம் | ட்விட்டர் 
செய்திகள்

விஜய் சேதுபதி நடித்த இணையத் தொடரின் அப்டேட்! 

நடிகர் விஜய் சேதுபதி ஹிந்தியில் நடித்துள்ள புதிய தொடர் ஒன்றின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது. 

DIN

ஃபேமலி மேன் இணையத்தொடரின் புகழ்பெற்ற ராஜ் & டிகே இணைந்து தயாரிக்க, ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, கே கே மேனன் ஆகியோர்  முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

8 எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்தத் தொடரினை சீதா ஆர்.மேனன், சுமன் குமார், ஹொசைன் டலால் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். மேலும் இந்த தொடரில் ரெஜினா கேசந்திரா, ஜாகீர் ஹொசைன், அமோல் பனேக்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்தத் தொடர் சாலையோர கலைஞர்களுக்கும் அரசாங்கத்திற்கும் நடக்கும் கதையென தகவல் வெளியாகியுள்ளது. ஷாகித் கபூருக்கு இது முதன்முறை ஓடிடி ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தத் தொடரின் டிரைலர் நாளை (ஜன.11) வெளியாக உள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பிப்.10ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம்

செங்கம் அரசுப் பள்ளியில் நூலக வாரவிழா

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

ஆக்கிரமிப்புகளை அகற்ற வணிகா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை கெடு!

SCROLL FOR NEXT