செய்திகள்

வைரலாகும் ’விஜய் 67’ விடியோ!

DIN

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘விஜய் 67’ படத்தின் ரசிகர்கள் தயாரித்த புரோமோ விடியோக்கள் வைரலாகி வருகின்றன.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக விஜய் இணைந்துள்ளார்.

விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, விஜய் 67 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பணிகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ளார்.

லோகேஷ் - விஜய்யின் முதல் படமான மாஸ்டர் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்த படம் முழுக்க முழுக்க லோகேஷ் ஸ்டைலில் தான் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காதல் காட்சிகள், பாடல்கள் எதுவும் இல்லாமல் கைதி படம் போன்று முழுக்க முழுக்க பான் இந்தியா ஆக்‌ஷன் படமாக உருவாகிறது விஜய் 67.

இந்தப் படத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான்,  சஞ்சய் தத் எனப் பலர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில், வாரிசு வெளியான சில திரையரங்குகளில் ‘விஜய் 67’-க்காக ரசிகர்கள் தயாரித்த புரோமோ விடியோ வெளியிடப்பட்டு வருகிறது. 

தற்போது, அந்த விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT