செய்திகள்

ஸ்ருதி ஹாசன் நடித்த 2 படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல்! 

நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்த இரண்டு படங்களும் தலா ரூ.100 கோடிக்கும் அதிகமாக  வசூலித்துள்ளது. 

DIN

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறன் கொண்டவர். அஜித், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்திருந்தார். 

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது 'கேஜிஎஃப்' இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக 'சலார்' படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

பொங்கலுக்கு தெலுங்கில் வெளியாகும் இரண்டு பெரிய படங்களில் ஸ்ருதி ஹாசன்தான் கதாநாயகி. பாலகிருஷ்ணாவுடன் ‘வீர சிம்ஹ ரெட்டி’, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ‘வால்டர் வீரய்யா’ படத்திலும் நடித்துள்ளார். பாலகிருஷ்ணா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஸ்ருதி ஹாசன் சிரஞ்சீவி படத்தின் புரமோஷனில் கலந்துக் கொள்ளவில்லை என கேள்வி எழுந்தது. பின்னர் அவருக்கு காய்ச்சல் என இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ஸ்ருதி நடித்த இரண்டு படங்களுமே பெரும் வெற்றி பெற்றுள்ளது. சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா திரைப்படம் 3 நாளில் உலகம் முழுவதும் ரூ.108 கோடி வசூலாகியுள்ளது. பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹ ரெட்டிஉலகம் முழுவதும் 4 நாள்களில் ரூ.104 கோடியும் வசூலானதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

இதனால் ஸ்ருதி ஹாசனுக்கு டபுள் ட்ரீட்தான். மொத்தமாக இரண்டு படங்களையும் சேர்த்து ரூ.200 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது. இந்த வகையில் உண்மையான பொங்கல் வின்னர் ஸ்ருதி ஹாசன்தான். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: மாணவர் உள்பட இருவர் பலி!

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

SCROLL FOR NEXT