செய்திகள்

வைரலாகும் கீர்த்தி சுரேஷின் க்யூட்டான புகைப்படங்கள்! 

நடிகை கீர்த்தி சுரேஷ் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

DIN

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி திருப்புமுனையாக அமைந்தது.

இதனையடுத்து கமர்ஷியல் படங்களுடன் தனி கதாநயாகியாகவும் படங்களில் அசத்தி வருகிறார். அப்படி அவர் தனி கதாநாயகியாக நடித்த மிஸ் இந்தியா, பென்குயின் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனினும் சாணிக் காயிதம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். 

சமீபத்தில் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ‘ரகு தாத்தா’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. பின்னர், ஜன.14 புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ’ரீவால்வர் ரீட்டா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியது. 

இந்நிலையில், நேற்று கீர்த்தி சுரேஷ் மஞ்சள் நிற புடவையில் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் நடிகை பிரியங்கா மோகனுடன் எடுத்த புகைப்படத்திற்கும் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT