செய்திகள்

நடிகை விமலா ராமனின் காதலர் தமிழ் நடிகரா?

நடிகை விமலா ராமன் தனது காதலருடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN

நடிகை விமலா ராமன் தனது காதலருடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் பிறந்த நடிகை விமலா ராமன் தமிழில் பாலசந்தரின் ‘பொய்’ எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் மலையாள படங்களில் அதிகம் கவனம் செலுத்தி நடிக்க ஆரம்பித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்  என தென்னிந்திய சினிமாவில் நடித்துள்ளார். 

42 வயதான விமலா ராமன் நேற்று (ஜன.23) தனது பிறந்தநாளை கொண்டாடினார். பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிஅலையில் அவர் தனது காதலருடனும் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அவர் வேறு யாருமில்லை. தமிழ் நடிகர் வினய் ராய். 

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘டாக்டர்’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் வரவேற்பினை பெற்றார். உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், என்றென்றும் புன்னகை, அரண்மனை போன்ற படங்கள் அவரது வெற்றிப் படங்களாகும். துப்பறிவாளன் படத்தில் வில்லனாக அறிமுகமானர். 

வினய் ராயுடன் எடுத்த புகைப்படத்தினைப் பதிவிட்டு ‘எனது குடும்பம்’ என பதிவிட்டுள்ளார். இவர்கள் இருவரும் 2011இல் டேம் 999 படத்தில் ஒன்றாக நடித்தனர். பின்னர் இருவரும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நட்பில் இருந்து வந்துள்ளனர். விரைவில் அதிகாரபூர்வமாக இவர்களது காதல் வாழ்க்கையை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT