செய்திகள்

நடிகர் டோவினோ தாமஸ் படத்தில் த்ரிஷா: அதிகாரபூர்வ அறிவிப்பு! 

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் படத்தில் நடிகை த்ரிஷா இணைந்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

DIN

தமிழில் மாரி - 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் டோவினோ தாமஸ். மலையாளத்தில் 2012 முதலே நடிக்க ஆரம்பித்தவர் என்னு நிண்டே மொய்தீன், மாயநதி, தீவண்டி, எண்ட உம்மாண்டே பேரு, மின்னல் முரளி, தள்ளுமாலா என பல நல்ல படங்களில் நடித்துள்ளார். 

சமீபத்தில் டோவினோ நடிப்பில் வெளியான 2018 திரைப்படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

இந்நிலையில், டோவினோ நடிப்பில் பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஃபாரன்சிக்’ படத்தை இயக்கிய அகில் பால் மற்றும் அனாஸ் கான் இயக்கத்தில் ‘ஐடென்டி’ என்கிற புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளது உறுதி ஆகியுள்ளது. நடிகர் டோவினோ தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்து, “அற்புதமான படத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு ஆவலுடன் உள்ளேன். மறக்க முடியாத அனுபவங்களுக்கு தயாராகுங்கள் மக்களே. படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறேன். அதிகமான சண்டைக் காட்சிகள் எடுக்க உள்ளோம்” எனவும்  டோவினோ கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊராட்சிச் செயலா்களின் தொடா் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு

சமத்துவ பொங்கல் விழா

அம்மன் தாலி செயின் திருடிய இருவா் கைது

விஜய்யிடம் பொங்கலுக்குப் பின் மீண்டும் விசாரணை!

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT