முகப்பு
செய்திகள்

டாக்டர் படம் மாதிரி எனது நடிப்பு புதியதாக இருக்கும்: மாவீரன் குறித்து சிவகார்த்திகேயன்! 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படத்தில் தான்  சிறப்பாக நடித்துள்ளதாக கூறியுள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:02 PM
பகிர்:

மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. 

நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் சிவகார்த்தியேன் சினிமா வாழ்வில் முக்கிய படமாக அமைந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை கொடுத்தப் படமாக டாக்டர் திரைப்படம் இருந்து வருகிறது.  

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ப்ரோமோஷன் விழாவில், “டாக்டர் படத்தில் என்னுடைய வேறு விதமான நடிப்பினை பார்த்திருப்பீரகள். அதேபோல இந்தப் படத்திலும் என்னுடைய வேறி விதமான நடிப்பினை பார்ப்பீர்கள். படத்தில் காதல் காட்சிகளும் இல்லை. வண்ணாரப்பேட்டை பாடல் மட்டுமே அதிதிக்கும் எனக்குமான காதல் காட்சிகளாக இருக்கும். படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன்” எனக் கூறினார். 

டாக்டர் திரைப்படம் மாதிரி மாவீரன் திரைப்படம் சிவகார்த்திகேயனை காப்பாற்றுமா என  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.