செய்திகள்

சத்யஜித் ரேவின் நாயகி போல அலங்காரம்: நித்யா மேனனின் அழகான புகைப்படங்கள்! 

நடிகை நித்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல லெஜண்டரி இயக்குநர் சத்யஜித் ரேவின் நாயகியைப் போல அலங்காரம் செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

DIN

மேற்குவங்கத்தை சேர்ந்த சத்யஜித் ரே இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். பெர்லின், கேன்ஸ், வெனிஸ் என முக்கியமான வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் இவரது படங்கள் திரையிடப்பட்டுள்ளது. காலங்கள் தாண்டியும் இவரது படங்கள் நிற்கிறதென கமல் உள்ளிட்ட பலரும் புகழ்ந்து வருகின்றனர். தேசிய விருது, பாரத் ரத்னா விருது முதல் ஆஸ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது எனப் பல வென்றுள்ளார். 

சாருலதா பட நாயகி மாதபி முகர்ஜி 

சுப்ரமணியபுரம் பட இயக்குநர் சசிகுமார்கூட சமீபத்தில் ரேவின் பாதிப்பு குறித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

நடிகை நித்யா மேனன் தமிழில் நடிகர் சித்தர்த்துடன் 180 படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து வெப்பமட், மாலினி 22 பாளையங்கோட்டை, காஞ்சனா ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யின் மெர்சல் படத்திலும் நாயகியாக நடித்திருப்பார். 

சத்யஜித் ரேவின் சாருலதா பட நாயகி 

மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி பத்தில் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கடைசியாக தமிழில் தனுஷுடன் இவர் நடித்த திருச்சிற்றம்பலம் படம் ரூ.100 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்துவரும் நித்யா மேனன் நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து  நடித்து வருகிறார். தற்போது மலையாளத்தில் கொலாம்பி, அறம் திருகல்பனா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். 

சத்யஜித் ரேவின் சாருலதா நாயகி

இந்நிலையில் லெஜண்டரி இயக்குநர் சத்யஜித் ரேவின் சாருலதா திரைப்பட கதாநாயகியை போல அலங்காரம் செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

அந்த கதாபத்திரத்தினை புரிந்து கொள்வதற்காகவும் அதிலிருந்து புதிய கதைகளை உருவாக்குவதற்காகவும் இப்படியாக மறு உருவாக்கம் செய்கிறோம் எனக் கூறியுள்ளார். மூலப்படைப்பின் ஒளிப்பதிவின் சாரத்தினை உள்நோக்கி ஆராய இந்த புதிய மறு ஆக்கங்கள் உதவுவதாகவும் கூறியுள்ளார் நித்யா மேனன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT