அமெரிக்காவில் பிறந்த தெலுங்கு பேசும் ஸ்ரீ லீலா பெங்களூரில் வளர்ந்தவர். மருத்துவ படிப்பினை 2021இல் முடித்தார். அதற்கு முன்பாகவே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2019இல் கன்னட படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கில்தான் பிரபல நடிகையாக அறியப்படுகிறார். 2022இல் இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்துள்ளார்.
சமீபத்தில் ரவி தேஜாவுடன் தமாகா படத்தில் நடித்து மிகப்பெரும் ஆதரவினைப் பெற்றார். சிறிய வயதிலிருந்தே பரதநாட்டியம் ஆடிப் பழகியவர். இவரது பல்சர் பாடல் செம்ம வைரலானது.
இதையும் படிக்க: விஜய் தேவரகொண்டாவின் 13வது படம்: வைரலாகும் பூஜை புகைப்படங்கள்!
தற்போது மகேஷ்பாபு, பவன்கல்யாண், நந்தமுரி பால கிருஷ்ணா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இன்று பிறந்தநாள் காணும் ஸ்ரீ லீலாவிற்கு பலரும் வாழ்த்துகள் கூறிவரும் நிலையில் மகேஷ் பாபு குண்டூர் காரம் படக்குழு அவரது முதன்மை தோற்ற போஸ்டரை வெளியிட்டுள்ளது.
அடுத்து பஞ்ச வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக நடிக்கும் ஆதிகேஷவா படத்தில் இருந்து சிறப்பு விடியோ வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.