செய்திகள்

ரசிகர்களைக் கவரும் லியோ அனிமேஷன் டீசர்!

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் ஒருவர் உருவாக்கிய லியோ அனிமேஷன் டீசர் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

DIN

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் ஒருவர் உருவாக்கிய லியோ அனிமேஷன் டீசர் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா,  சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன்  ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

முதல் பாடலான ‘நா ரெடிதான்’ பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மேடி மாதவ் என்கிற ரசிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ அனிமேஷன் விடியோ ஒன்றை உருவாக்கி யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

SCROLL FOR NEXT