’1500 படங்களுக்கு இசையமைத்த பின் இதைச் சொல்கிறேன்..’: இளையராஜா
இயக்குநர் வெற்றிமாறன் குறித்து இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் குறித்து இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
'அசுரன்’ திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார்.
இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
Advertisement
இதையும் படிக்க: 'இந்தியன் 2’ சண்டைப் பயிற்சியாளர்களுடன் கமல்ஹாசன்!
இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
இந்நிலையில், டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா ‘வெற்றிமாறன் திரையுலகின் முக்கியமான இயக்குநர். அவருடைய ஒவ்வொரு திரைக்கதையும் வேறுவேறானவை. அதில் எனக்கு பெரிய சந்தோஷம். 1500 படங்களுக்கு மேல் இசையமைத்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், வெற்றிமாறன் சிறந்த இயக்குநர்’ எனத் தெரிவித்துள்ளார்.