முகப்பு
செய்திகள்

இன்று இரவு வெளியாகும் சிம்புவின் 'பத்து தல' டிரைலர்!

சிம்புவின் 'பத்து தல' படத்தின் டிரைலர் இன்று இரவு வெளியாகவுள்ளது.

Updated On : 18 மார்ச், 2023 at 6:09 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:16 PM

சிம்புவின் 'பத்து தல' படத்தின் டிரைலர் இன்று இரவு வெளியாகவுள்ளது.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். 

Advertisement

சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ படத்தின் முதல் பாடலான ‘நம்ம சத்தம்’ பாடலின் லிரிக்கல் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.  2வது பாடல், ‘நினைவிருக்கா' மார்ச் 13ம் தேதி மாலை 6 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்த நிலையில், 'பத்து தல' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள நிலையில்,  இன்று இரவு 10 மணிக்கு பத்து தல படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.