செய்திகள்

ராஷ்மிகாவைத் தொடர்ந்து கஜோலின் போலி விடியோ வைரல்!

DIN

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டீப் ஃபேக் எனப்படும் அசல் போன்ற போலி காணொளி உருவாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொளி இணையத்தில் வைரலானது. 

இந்தக் போலியான காணொளியைப் பரப்பியவா் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனா்.

இந்நிலையில், நடிகை கஜோலின் போலி விடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் ஆடைகளை மாற்றுவதுபோல் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதனால், கஜோல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததுடன் இப்பிரச்னையை இந்திய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கஜோல் ஷாருக்கானுடன் ‘தில்வாலே  துல்ஹனியா லே ஜாயங்கே’ ( Dilwale Dulhania Le Jayenge )  படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர். தமிழில் மின்சாரக் கனவு, வேலையில்லா பட்டதாரி - 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

ராஷ்மிகா, கத்ரினா கைஃப் ஆகியோரின் போலி விடியோக்கள் வைரலான நிலையில் கஜோலின் விடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

போலி விடியோ பரப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT