செய்திகள்

நானியின் ஹாய் நான்னா: வெளியானது ஸ்ருதி ஹாசனின் பாடல்! 

பிரபல நடிகர் நானியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ஹாய் நான்னா படத்தில் இருந்து ஸ்ருதி ஹாசனின் பாடல் வெளியாகியுள்ளது. 

DIN

கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பு மட்டுமின்றி பாடல் பாடுவதிலும் இசையமைத்திலும் நாட்டமுள்ளவர். அஜித், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடத்து வருகிறார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது 'கேஜிஎஃப்' இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக 'சலார்' படத்திலும் நானியின் ஹாய் நான்னா படத்திலும் நடித்து முடித்துள்ளார். 

நானியின் 30வது படத்தினை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஷௌர்யுவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ‘ஹாய் நான்னா’ எனப் பெயரிட்டுள்ளார்கள். வைரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சீதா ராமம் புகழ் மிருணாள் தாக்குர் நடித்துள்ளார். 

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹீஷம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ளார்.  சமந்த-விஜய் தேவரகொண்ட நடித்த குஷி படத்திற்கும் இதே இசையமைப்பாளர்தான். குஷி படத்தில் அனைத்து பாடல்களும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. 

நல்ல பொழுதுபோக்கான படங்களை தேர்வு செய்து நடிக்கும் நானியின் படங்களுக்கு தமிழிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புள்ளது. இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள பாடல் வெளியாகியுள்ளது.

ஹாய் நான்னா படம் டிச.21ஆம் நாள் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது குறிப்பித்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT