ராமாயணக் கதையில் யஷ், சாய் பல்லவி?
ராமாயணக் கதையில் நடிகர்கள் யஷ், ரன்பீர் கபூர், நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'பவால்’, ‘சிச்சோரே’ ஆகிய படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி, அடுத்ததாக ராமாயணத்தை படமாக்க உள்ளார்.
இப்படத்தின் முதற்கட்ட பணிகளில் அவர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இப்படத்தில் நடிகர்கள் யஷ், ரன்பீர் கபூர், நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: கவனம் ஈர்க்கும் ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்!
Advertisement
இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் 2024 துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.