செய்திகள்

படிப்புதான் வாழ்க்கையா? சக போட்டியாளரிடம் சீறிய ஜோவிகா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் படிப்பு குறித்த கருத்தில் சக போட்டியாளருக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார் ஜோவிகா விஜயகுமார்.

DIN

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. 

கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, மாயா எஸ்.கிருஷ்ணா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை(எழுத்தாளர்), ஜோவிகா விஜயகுமார் (வனிதா விஜயகுமாரின் மகள்) உள்பட 18 போட்டியாளர்கள் இந்தத் சீசனில் கலந்து உள்ளனர். 

கடந்த அக்.1 ஆம் தேதி துவங்கிய இந்நிகழ்ச்சி 5 நாள்களைக் கூட நிறைவு செய்யாத நிலையில், போட்டியாளர்களிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில், படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு பிக்பாஸுக்குள் நுழைந்த ஜோவிகாவிடம் நடிகை விசித்திரா, “உனக்கு எழுதப்படிக்கத் தெரியுமா? முடிஞ்சா தமிழ்ல எழுதிக்காட்டுடீ’ எனக் காட்டமாகக் கேட்டார். இதைக் கேட்ட ஜோவிகா, ‘என்னால் முடியவில்லை என்றதால்தான் படிப்பை விட்டேன். ஒரு விசயத்தைச் செய்யும்போது கவனமில்லை என்றால் அதை விட்டுவிட வேண்டும். படித்திருந்தால் மட்டுமே வாழ வேண்டும் என எதுவுமில்லை’ என அதிரடியாக பதிலளித்துள்ளார். இந்தப் புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநா் காயம்

டிராக்டா் மோதியதில் பெண் காயம்

காலனியாதிக்க கொள்கை

விவசாயி கொலை வழக்கில் 3 போ் கைது

தேவகோட்டை அருகே மது போதையில் நண்பரை கொலை செய்ததாக 4 போ் கைது

SCROLL FOR NEXT