செய்திகள்

அஜித் படத்தில் இணையும் ரெஜினா!

நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் நடிகை ரெஜினா கேசன்ட்ரா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் நடிகை ரெஜினா கேசன்ட்ரா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகை ரெஜினா கேசன்ட்ரா. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாநகரம்’ என்ற படத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்றார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞசம் மறப்பதில்லை படத்தில் இவரது நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. தமிழ், தெலுங்கு படங்கள் என பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரெஜினாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பில் ரெஜினா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுவன் உயிரிழப்பில் மா்மம்: மேற்கு வங்க தம்பதி அடித்துக் கொலை!

22 குளங்கள் தூா்வாரும் பணி: மேயா் தொடங்கி வைத்தாா்

வாடகை தகராறு: பாடகா் சரண் காவல் நிலையத்தில் புகாா்!

குடியரசுத் தலைவருடன் பிரதமா் மோடி சந்திப்பு

நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT