செய்திகள்

முன்பதிவில் அசத்தும் லியோ: முதல் நாள் வசூல் ரூ.100 கோடியை தாண்டுமா? 

முன்பதிவில் அசத்திவரும் லியோ படம் முதல் நாளில் ரூ.60 கோடியை தாண்டி வசூலிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் அக். 5ஆம் தேதி வெளியானது. 

டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படத்தில் 3 பாடல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் 4வது பாடல் வெளியாகுமென லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். படத்தின் அனைத்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் புதிய புகைப்படத்தினை வெளியிட்டார்.

முன்பதிவில் அசத்திவரும் லியோ படம் முதல்நாள் வசூலில் ரூ.60 கோடியை தாண்டுமென தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.100 கோடியை வசூலிக்குமெனவும் கணிக்கப்பட்டுள்ளது. அப்படி வசூலித்தால் ரஜினியின் 2.0 படம் (ரூ.118 கோடி), கபாலி (ரூ.106 கோடி), ஜெயிலர் (ரூ.102 கோடி) ஆகிய படங்களின் வசூலை முந்துமா எனப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

லியோவில் த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 43 நிமிடம் இருக்குமென லோகேஷ் கூறியிருந்தார். படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

SCROLL FOR NEXT