செய்திகள்

சி.எஸ். அமுதன்-விஜய் ஆண்டனி கூட்டணியில் ரத்தம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு! 

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் படத்தின் ரிலீஸ் தேதி விடியோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

தமிழ்ப்படம் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படத்திற்கு ரத்தம் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர்.  

இசை- கண்ணன் நாராயணன். ஒளிப்பதிவு- கோபி அமர்நாத். சண்டைப் பயிற்சி- திலீப் சுப்பராயன். கடந்தாண்டு வெளியான ‘ரத்தம்’ பட டீசரில் சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், வெங்கட்பிரபு ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் வித்தியாசமான புரமோஷன் மூலம் படம் வரும் செப்.28ஆம் நாள் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

முதல் பார்வை போஸ்டர், முதல் பாடல், இரண்டாவது பாடல், இசை வெளியீட்டு விழா, இசை வெளியிட்டு விழாவில் சர்ச்சையான பேச்சு என சகலவிதமான தமிழ் சினிமாவின் போக்கினை கிண்டல் செய்து படத்தின் ரிலீஸ் தேதியினை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஓட்டுநருக்கு 27 ஆண்டுகள் சிறை

தொழிலாளி கொலை: ஒருவா் கைது

கணக்கீட்டுப் படிவம் நிரப்பும் பணி தீவிரம்

வாக்குச்சாவடி மையங்களில் நாளை சிறப்பு உதவி மையம்

எக்ஸ்காலிபா், ஜாவ்லின் ஏவுகணை உபகரணங்கள்: இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

SCROLL FOR NEXT