செய்திகள்

இவ்வளவு நாள் இந்தியா என்ற பெயர் பெருமை தரவில்லையா?: சேவாக்கிடம் விஷ்ணு விஷால் கேள்வி!

நடிகர் விஷ்ணு விஷால் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக்கின் பதிவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN

தில்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாடையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள விருந்தினர் அழைப்பிதழில் 'பாரத குடியரசுத் தலைவர்' (தி பிரசிடென்ட் ஆஃப் பாரத்) என்று அச்சிடப்பட்டுள்ளது. 

இந்தியா என்ற பெயர் 'பாரதம்' எனக் குறிப்பிட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

அதிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் வைத்ததால்தான் மத்திய பாஜக அரசு அந்த பெயரை மாற்ற முயற்சிப்பதாக அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் கூறி வருகின்றன.  

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக், “நான் எப்போதுமே ஒரு பெயரினை மட்டுமே பெருமையாக நினைப்பதுண்டு. நாமெல்லம் பாரதர்கள். இந்திய என்ற பெயர் ஆங்கிலேயர்கள் கொடுத்தது. நமது பாரதம் எனும் சொந்தப் பெயரினை அடைவதற்கு இவ்வளவு காலம் பிடித்துள்ளது. பிசிசிஐயின் செயலாளர் ஜெய்ஷாவிடம் வேண்டுவதெல்லாம் உலகக் கோப்பை போட்டியில் நமது அணி வீரர்கள் ஜெர்சியில் பாரத் எனக் குறிப்பிட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். 

இந்தப் பதிவினை பகிர்ந்து நடிகர் விஷ்ணு விஷால், “இவ்வளவு நாள் இந்தியா என்ற பெயர் பெருமையை தரவில்லையா?” எனக் கேள்வி கேட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல்: விடைபெற்றாா் அஸ்வின்

பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’ - பதக்க வாய்ப்பை இழந்தாா் குகேஷ்

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவின் விருப்பத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

SCROLL FOR NEXT