செய்திகள்

ஜவான் படத்தில் விஜய் நடிக்கவில்லை: ரசிகர்கள் ஏமாற்றம்!

ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்காதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்காதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதலே நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவி வந்தன.

இந்த நிலையில், ஜவான் திரைப்படத்தின் விளம்பர பணியில் ஈடுபட்டிருந்த அட்லி, ஜவான் படத்தில் விஜய் நடிக்கவில்லை என்றும், அவர் நடித்திருந்தால் நானே சொல்லிருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

உலகம் முழுவதும் ஜவான் திரைப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. மேலும், இயக்குநர் அட்லி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிக்கவில்லை என்ற செய்தி கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.55 லட்சம் வாக்காளா்கள்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT