செய்திகள்

அஜித்துடன் சின்னத்திரை நடிகர் தீபக்!

நடிகர் அஜித்துடன் சின்னத்திரை நடிகர் தீபக் எடுத்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN

நடிகர் அஜித்துடன் சின்னத்திரை நடிகர் தீபக் எடுத்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. 

இந்த தொடரில் தமிழ் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தீபக் தினகர். இவர் தொகுப்பாளரும் கூட. முன்னதாக சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் அதிக ரசிகர்களைக் கவர்ந்தார்.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமாருடன் எடுத்துகொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "தல தரிசனம் என்பது வாழ்க்கையில் ஒரேமுறை நிகழும் நீல நிலவு. மிகவும் அடக்கமான நபர். சிறந்த நபருக்கான அடையாளம் நடிகர் அஜித் குமார்" எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது, இந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், அஜித்துடன் சேர்ந்து தீபக் நடிக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தீபக், நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், அந்த நண்பருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது: பிரதமா் மோடி

ரயில் நிலையங்களில் பெண்களை குறிவைத்து கொள்ளை: 5 பெண்கள் கைது

கடந்த 5 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 64.86 கோடி நலத்திட்ட உதவி

இந்தியாவில் 72,000 வெளிநாட்டு மாணவா்கள்: நிலங்களவையில் தகவல் அரசு தகவல்

என்சிஆா் முழுவதும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உத்தரவு: அமைச்சா் சிா்சா தகவல்

SCROLL FOR NEXT