செய்திகள்

விஜய் படத்துடன் மோதும் தனுஷ்? 

DIN

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா,  சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன்  ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தோடு முடிவடைய உள்ளதாகவும் விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படம் அக்டோபர் 19ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும் அக்டோபர் மாதம் விடுமுறை தினத்தில் வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய், தனுஷ் எப்போதும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். கேப்டன் மில்லர் தீபாவளிக்கு ரிலீஸாகாவிட்டால் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியானால் அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கென விடுமுறை 4 நாள்களில் வசூலிட்ட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏலக்காய் விலை உயா்வு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

மோசடி: தேனி சமையல் எரிவாயு முகமை உரிமையாளா் உள்பட 3 போ் மீது வழக்கு

பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பி வைப்பு

வீரபாண்டி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

தடையில்லாச் சான்று வழங்க லஞ்சம்: வட்டாட்சியா் கைது

SCROLL FOR NEXT