முகப்பு
செய்திகள்

2023-ன் மிகப் பிரபலமான திரைப்படங்கள் பட்டியலில் ரஜினி, விஜய்!

இந்தாண்டில் வெளியான படங்களில் மிகப் பிரபலமான திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐஎம்டிபி.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:27 AM
பகிர்:

2023 ஆம் ஆண்டு திரையங்குகளில் வெளியாகி அதிக பிரபலமான இந்திய திரைப்படங்களின் பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது.

முதலிடத்தில் ஷாருக்கானின் ஜவான் இருக்கிறது. இரண்டாவது இடத்தைப் பதான் திரைப்படம் பிடித்திருக்கிறது. 3. ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி, 4. லியோ, 5. ஓஎம்ஜி 2, 6. ஜெயிலர், 7. கடார் - 2, 8. தி கேரளா ஸ்டோரி, 9. து ஜோதி மெயின் மக்கார், 10. போலா ஆகியவை பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

ரஜினி மற்றும் விஜய் ஆகியோரின் இரண்டு தமிழ் படங்கள் இப்பட்டியலில் இடம் பிடித்து கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக, ஜவான் படத்தை அட்லி இயக்கியது என்பதால் 3 தமிழ் இயக்குநர்கள் இந்திய அளவில் பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர்.

மேலும், நேரடியாக ஓடிடியில் வெளியாகி பிரபலமடைந்த படங்களின் பட்டியலில், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 (lust stories 2), ஜானே ஜான் (jaane jaan), மிஷன் மஞ்சு, பவால், சோர் நிகல் கே பஹா (chor nikal ke bhaga), பிளடி டாடி, சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹாய் (sirf ek banda kaafi hai), கேஸ்லைட், கதல்: ஏ ஜாக் புரூட் (kathal: a jackfruit), மிஸ்சஸ் அண்டர்கவர் (mrs.undercover) முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன. 

இணையத் தொடர்கள் வரிசையில் ஷாகித் கபூர் நடிப்பில் ராஜ் அண்ட் டிகே இயக்கத்தில் வெளியான ஃபார்சி தொடர் முதலிடத்தில் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →