முகப்பு
செய்திகள்

ஜவான் வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

செய்திகள்

ஜவான் வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:12 PM
பகிர்:

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் நேற்று உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.129.6 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதனால், இதுவரை வெளியான பாலிவுட் படங்களிலேயே முதல்நாள் வசூலில் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்த படமாக உருமாறியுள்ளது.

ஜவான் திரைப்படம் டிக்கெட் முன்பதிவு வாயிலாகவே ரூ.40 கோடியைக் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →