கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்ட ‘டியர்’ படத்தின் டிரைலர்!
இந்திய கிரிக்கெட் வீரர் ரவி அஸ்வின் ஜி.வி.பிரகாஷ் பட டிரைலரை வெளியிட்டார்.
வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் தேசிய விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். பல அற்புதமான பாடல்களை இசையமைத்தவர் தற்போது நடிகராகவும் 24 படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்த திவ்யபாரதி, ஜிவி 25 படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.
டியர் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்ல இந்தப் படத்துக்கு இசையமைத்தும் இருக்கிறார். இந்தப் படத்தினை அனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படம் வரும் ஏப்.11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு ‘தலவலி’ எனும் பாடல் வெளியாகி கசனம் பெற்றது.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் இந்தப் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.