செய்திகள்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலுக்கு உதவிய நடிகர் தனுஷ்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டதெனக் கூறியுள்ளார்.

DIN

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் 1140 கோடி வசூலித்தது.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர். அவர்களது குழந்தைகளுக்கு உயிர், உலக் என வித்தியாசமாக பெயரிட்டுள்ளார்கள்.

இந்நிலையில், இருவருக்கும் காதல் எப்போது, யாரால் தொடங்கியது என்ற கேள்விக்கு ஆங்கில ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த இயக்குநர் விக்னேஷ் சிவன், “தனுஷ் சார்தான் நானும் ரௌடிதான் கதையை நயனிடம் (நயன்தாராவிடம்) சொல்லச் சொன்னார். நயன்தாராவுக்கும் அது பிடித்திருந்தது. நயன் படத்தில் வந்ததால்தான் முதலில் இந்தப் படத்தில் பணியாற்ற விரும்பாத விஜய் சேதுபதியும் இதில் நடிக்க சரி என்றார். இந்தப் படத்தின் மூலமாகத்தான் நாங்கள் பழக ஆரம்பித்தோம். ஒரு வருடத்தில் நாங்க நெருக்கமாகிவிட்டோம்” என்றார்.

காதல் குறித்து நடிகை நயன்தாரா அதே நேர்காணலில், “இது எங்களுக்கு மிகவும் இயற்கையாக நடந்தது. நாங்கள் அப்படியே வாழ்க்கையின் ஓட்டத்தில் சென்று கொண்டிருந்த்தோம். 3 மாதங்கள் ஆன பிறகுதான் புரிந்தது எங்களுக்குள் இது இருக்கிறதென” என்றார்.

நானும் ரௌடிதான் படப்பிடிப்பில்.

2015இல் நானும் ரௌடிதான் திரைப்படம் வெளியானது. 2014இல் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியல்

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

கோயில் குளத்தில் கிராம உதவியாளா் சடலம் மீட்பு

ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி மருங்கூரில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்பு

SCROLL FOR NEXT