செய்திகள்

சஞ்சய் லீலா பன்சாலியின் முதல் இணையத் தொடர் அப்டேட்!

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய இணையத்தொடர் வரும் மே.1ஆம் தேதி வெளியாக உள்ளது.

DIN

ஹிந்தியில் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. சரித்திர படங்கள் எடுப்பதிலும் காதல் படங்கள் எடுப்பதிலும் கவனம் பெறுகிறார்.

இறுதியாக இவர் இயக்கிய கங்குபாய் கதியவாடி திரைப்படத்துக்கு ஆலிய பட்டிற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. மேலும் சிறந்த ஒப்பனை, சிறந்த எடிட்டிங், சிறந்த வசனம், சிறந்த தழுவலுக்கான திரைக்கதை ஆகிய பிரிவுகளில் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

சஞ்சய் லீலா பன்சாலி முதன்முதலாக இணையத் தொடர் ஒன்றினை இயக்கியுள்ளார். நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகுமென முன்பே கூறப்பட்டது.

இந்தத் தொடருக்கு ஹீரமண்டி எனப் பெயடிரப்பட்டுள்ளது. இதில் சோனாக்‌ஷி சின்கா, அதிதி ராய் ஹைதரி, மனிஷா கொய்ராலா, ஷர்மின் சேகல் உள்பட பலர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இதன் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இந்தத் தொடர் வரும் மே.1ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

இதில் 15 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் நடித்த ஃபர்தீன் கான் இந்தத் தொடரில் நடித்துள்ளார். இவரின் முதல் பார்வை போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

SCROLL FOR NEXT