செய்திகள்

பனி விழும் மலர் வனம்.. பாடல் அல்ல, புது சீரியல்!

யாரடி நீ மோகினி, ரெக்க கட்டி பறக்குது மனசு, தேன்மொழி பி.ஏ., ஈரமான ரோஜாவே ஆகிய தொடர்களில் நடித்தார்.

DIN

ஈரமான ரோஜாவே தொடரில் நாயகனாக நடித்த சித்தார்த் குமரன் புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தொடருக்கு பனி விழும் மலர் வனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்த விணுஷா தேவி இத்தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நடிக்கும் முதல் தொடர் இதுவாகும்.

யாரடி நீ மோகினி, ரெக்க கட்டி பறக்குது மனசு, தேன்மொழி பி.ஏ., ஈரமான ரோஜாவே ஆகிய தொடர்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர் நடிகர் சித்தார்த் குமரன்.

2021ம் ஆண்டு அகடு என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதிலும் தனது நடிப்புக்கு நல்ல விமர்சனங்களைப் பெற்றார்.

ஈரமான ரோஜாவே இரண்டாவது சீசனில் நடித்ததன் மூலம் ஏராளமான பெண் ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது பனி விழும் மலர் வனம் என்ற புதிய தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனால் சித்தார்த்தின் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT