செய்திகள்

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

நடிகர் சூர்யா, கார்த்தி தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர். ஆனால் ஜோதிகா இதில் பங்கேற்கவில்லை.

DIN

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

காலையிலேயே பிரபலங்கள் அஜித், தனுஷ், சசிகுமார், வெற்றிமாறன், விஜய் என பலரும் வாக்களித்தார்கள்.

இந்நிலையில் சிவகுமார், சூர்யா, கார்த்தி தங்களது குடும்பத்துடன் வாக்களித்துள்ளார்கள். ஆனால் இதில் சூர்யாவின் மனைவி ஜோதிகா பங்கேற்கவில்லை.

நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேபாளுக்கு சுற்றுலா சென்றுள்ள விடியோவினைப் பகிர்ந்துள்ளார்.

ஜோதிகா தற்போது ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். சைத்தான் பட வெற்றிக்குப் பிறகு பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார் ஜோதிகா. மேலும் ஒரு ஹிந்தி இணையத்தொடரிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுவாபாடா எம்எல்ஏவாக பதவியேற்றார் ஜெய் தோலாகியா!

கோவை, மதுரைக்கு 2026 ஜூன் மாதத்துக்குள் மெட்ரோ: நயினார் நாகேந்திரன்

பேச மாட்டாயா? மானசா சௌத்ரி!

மறுவெளியீடாகும் அமர்க்களம்!

சேலத்தில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கிடைக்குமா?

SCROLL FOR NEXT