நடிகை மாளவிகா மோகனன் 
செய்திகள்

தெலுங்கில் அறிமுகமாகும் மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா மோகனன் தெலுங்கு படத்தில் அறிமுகமாக உள்ளதாக தங்கலான் புரமோஷனில் கூறியுள்ளார்.

DIN

பிரபலமான ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் ஹிந்தி படத்தில் மாளவிகா நாயகியாக அறிமுகமானார்.

தமிழில் நடிகர் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.  பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

தங்கலான் படத்தின் புரமோஷனுக்காக ஹைதராபாத் சென்ற மாளவிகா அங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தெலுங்கு சினிமாவில் நடிப்பதை உறுது செய்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் மாளவிகா பேசியதாவது:

மருதி இயக்கும் தி ராஜா சாப் படத்தில் நடிகர் பிரபாஸுடன் நடிக்க உள்ளேன். இதற்கு முன்பும் பல படங்கள் வாய்ப்பு கிடைத்தன. ஆனால் சரியான வலுவான கதைக்காக காத்திருந்தேன்.

ராஜா சாப் போஸ்டர்

தெலுங்கு சினிமா இந்தியாவிலேயே மிகப்பெரிய சினிமா துறையாக இருக்கிறது. அதனால் இதில் வலுவான கதையில் அறிமுகமாக வேண்டுமென நினைக்கிறேன். நடிகையாக என்னை மெருகேற்ற இந்தப் படம் உதவும். மேலும் எனது எல்லைகளை உயர்த்த இந்தப் படம் உதவும்.

நடிகை மாளவிகா, தங்கலானுக்கு பிறகு தமிழில் சர்தார் 2 படத்திலும் ஹிந்தியில் யுத்ரா எனும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தங்கலான் திரைப்படம் வரும் ஆக.15ஆம் நாள் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம்

தீபாவளிக்கு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பலே ரோஜா... மாளவிகா மோகனன்!

பிக் பாஸ் போட்டியாளர் எஃப்.ஜே.வுக்கும் ஹிப்ஹாப் ஆதிக்கும் என்ன தொடர்பு?

'இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது' - முதல்வர் மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT