நடிகை ரித்திகா சிங்  படங்கள்: லைகா புரடக்‌ஷன்ஸ் / எக்ஸ்
செய்திகள்

வேட்டையன்: டப்பிங் பணிகளை தொடங்கிய ரித்திகா சிங்!

வேட்டையன் படத்துக்கான டப்பிங் பணிகளை நடிகை ரித்திகா சிங் தொடங்கினார்.

DIN

தமிழில் 'இறுதிச்சுற்று' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதனைத் தொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’, ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்களில் நடித்தார்.

சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் நடித்திருந்தார். துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் கலாபக்காரன் பாடலில் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்று நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். 

இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் இதன் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஏற்கனவே இதன் டப்பிங் பணிகளை ஃபக்த் பாசில், துஷாரா விஜயன் முடித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான்!

திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை, கோவை காவல் நிலையத்தில் தற்கொலை! திமுக அரசுக்கு இபிஎஸ் கேள்வி

மத்திய அரசுத் துறைகளில் அதிகாரிப் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு

அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்தலாம்! சி.வி. சண்முகத்துக்கு அபராதம் - உச்ச நீதிமன்றம்

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19% எட்டியுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

SCROLL FOR NEXT