விஜய் சேதுபதி, நித்யா மேனன் 
செய்திகள்

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன்! அதிகாரபூர்வ அறிவிப்பு!

இயக்குநர் பாண்டிராஜ் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை நித்யா மேனன்.

DIN

கன்னட படத்தின் மூலம் 2006-இல் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார் நித்யா மேனன்.

குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் வெளியான, ‘காஞ்சனா - 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

அவர் நடிப்பில் உருவான ‘குமாரி ஸ்ரீமதி’, 'மாஸ்டர்பீஸ்’ ஆகிய இணையத்தொடர்களும் நல்ல வரவேற்பினைப் பெற்றன.

தற்போது காதலில் தோல்வியடைந்த பெண் பாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். இதற்கு 'டியர் எக்ஸஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் காமினி இயக்குகிறார்.

கிருத்திகா உதயநிதி இயக்கும் காதலிக்க நேரமில்லை படத்திலும் நடித்து வருகிறார்.

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை நித்யா மேனனுக்கு தமிழிலும் ரசிகர்கள் ஏராளம்.

திருச்சிற்றம்பலம் படத்துக்கு தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெரியாத எண்களில் இருந்து வரும் விடியோ அழைப்பு! பாலியல் மோசடி கும்பலாக இருக்கலாம்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் ஹமாஸை அழித்துவிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை

இது டிரைலர்தான்... அக். 25-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! புயலாக வலுவடையும்!

தமிழகத்தில் பகல் 1 மணிவரை கனமழை தொடரும்!

சென்னையில் அடுத்த 3 நாள்களுக்கு பலத்த மழை!

SCROLL FOR NEXT