முகப்பு
செய்திகள்

கோட் புரமோஷன் பணிகள் ஆரம்பம்!

Updated On : 27 ஆகஸ்ட், 2024 at 5:05 PM
நடிகர்கள் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல்.
பகிர்:

நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Advertisement

இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற ஆக்சன், டீஏஜிங் காட்சிகள் படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.

சமீபத்தில், கோட் புரமோஷனில் இயக்குநர் வெங்கட் பிரபு கலந்துகொண்டு பேசியபோது, “கோட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மேல் இருக்கும். என் திரைவாழ்வில் என்னுடைய பெரிய படமும் இதுதான். நிச்சயம் ரசிகர்களைக் கவரும்.” என்றார்.

இந்த நிலையில், படக்குழுவினர் வருகிற ஆக. 29 ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்திக்கின்றனர். அதன்பின், யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல்கள் கொடுக்க உள்ளனர். செப். 5 ஆம் தேதி கோட் உலகளவில் வெளியாகும் என்பதால் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.