செய்திகள்

லால் சலாம் ஓடிடி தேதி இதுவா?

DIN

நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்த இப்படம்ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று தோல்விப்படமானலும் சுமாரான வசூலைப் பெற்றது. 

இதுகுறித்து, நேர்காணலில் பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படத்தின் தோல்விக்கான காரணங்களைப் பற்றி பேசினார்.

அதில், "லால் சலாம் படப்பிடிப்பில் 21 நாள்கள் எடுத்த காட்சிகள் காணாமல் போய்விட்டது. ஆயிரக்கணக்கான பேர் சூழ, 10 கேமராக்கள் வைத்து கிரிக்கெட் போட்டியை ஷூட் செய்தோம். அவையனைத்தும் காணாமல் போய்விட்டது. மீண்டும் படப்பிடிப்புக்குச் சென்று தொலைந்த ஹார்ட் டிஸ்க்கில் (hard disk) இருந்த காட்சிகளை எடுக்கலாம் எனச் சொன்னார்கள். ஆனால், அது கடினமானது என்பதால் இருக்கும் காட்சிகளை வைத்தே படத்தை எடிட்டிங் செய்தோம். ஹார்ட் டிஸ்க் தொலையாமல் இருந்திருந்தால் நாங்கள் சொல்ல வந்ததை இன்னும் தெளிவாகக் கூறியிருப்போம்” எனக் கூறினார்.

இந்த விடியோவைப் பகிர்ந்த பலரும், “படத்தின் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது என பொய் சொல்லக் கூடாது” என்றும் “தயாரிப்பாளர் பணம்தானே? உங்கள் பணமாக இருந்தால் இப்படி பொறுப்பில்லாமல் பதில் சொல்வீர்களா?” என கடுமையாக விமர்சித்தனர்.

இணையத்தில் பரவும் போஸ்டர்.

இதற்கிடையே, படத்தின் ஓடிடி வெளியீடும் தாமதமாகி வந்தது. இந்த நிலையில், சன் நெக்ஸ்ட் ஓடிடியில் இப்படம் செப்.20 ஆம் தேதி வெளியாகும் என புதிய போஸ்டர் வெளியானது. ஆனால், அது உண்மையில்லை என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்

இரானி கோப்பை: விதா்பா சாம்பியன்!

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: 22 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு!

SCROLL FOR NEXT