செய்திகள்

சந்தியா ராகம் தொடரில் அறிமுகமாகும் பிரபல நடனக் கலைஞர்!

நடன நிகழ்ச்சியின்போது தனது நடிப்புத் திறமையையும் அவ்வபோது வெளிப்படுத்தியுள்ளார்.

DIN

சின்னத்திரையில் அக்கா - தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் சந்தியா ராகம் தொடரில் பிரபல நடனக் கலைஞர் நடிக்கவுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர் குரு.

நடனக் கலைஞரான இவர் நடிப்பின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். நடன நிகழ்ச்சியின்போது தனது நடிப்புத் திறமையையும் அவ்வபோது வெளிப்படுத்தியுள்ளார்.

நடன நிகழ்ச்சியில் குரு

இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சந்தியா ராகம் தொடரில் குரு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சந்தியா ராகம் தொடரின் ரசிகர்களிடையே இந்த செய்தி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2023 அக்டோபர் முதல் நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு சந்தியா ராகம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் சந்தியா ஜகர்லமுடி, அந்தாரா, விஜே தாரா, ராஜீர் பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இதில் ஜானகி, சந்தியா என்னும் இரு சகோதரிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளான தனலட்சுமி, மாயா என்னும் இரு சகோதரிகள் இடையேயான கதையாகும்.

சந்தியா ராகம் போஸ்டர்

இந்தத் தொடர் 100 எபிஸோடுகளைத் தாண்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. தொடரின் சுவாரசியத்தைக் கூட்டும் வகையில் முக்கிய பாத்திரங்களை இடைஇடையே அறிமுகப்படுத்துவத் வழக்கம். மக்களை ஈர்ப்பதற்காக அதில் பிரபலங்களை நடிக்கவைப்பதும் வழக்கம்.

அந்தவகையில், சந்தியா ராகம் தொடரில் நடனக் கலைஞர் குரு நடிக்கவுள்ளார். அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடன நிகழ்ச்சியில் நடுவர்களுடன் நடனமாடும் குரு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலுக்கு அடியில் வெளியிடப்பட்ட திரௌபதி - 2 முதல் பார்வை!

ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!

நடிகரானார் டூரிஸ்ட் ஃபேமலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்!

வாக்குரிமைப் பேரணி: பிகாரிலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

SCROLL FOR NEXT