இயக்குநர் வெற்றிமாறனுடன் நடிகை மஞ்சு வாரியர்.  படம்: இன்ஸ்டா / மஞ்சு வாரியர்.
செய்திகள்

வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்த மஞ்சு வாரியர்!

விடுதலை -2 படத்தில் தனது கதாபாத்திரத்துக்காக இயக்குநருக்கு நன்றிதெரிவித்துள்ளார் மஞ்சு வாரியர்.

DIN

விடுதலை -2 படத்தில் மகாலட்சுமி கதாபாத்திரத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை - 2 திரைப்படம் நேற்று (டிச. 20) திரையரங்குகளில் வெளியானது.

முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மேல் எதிர்பார்ப்பு இருந்தது.

முழுக்க முழுக்க அரசியல் படமாக விடுதலை - 2 உருவாகியுள்ளது. இதில் நடிகை மஞ்சு வாரியர் வரும் காட்சிகள் மட்டுமே ரசிகர்களுக்கு இதமாக இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

விடுதலை 2 படத்தில் மிகவும் முற்போக்கான கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் மகாலட்சுமி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ள மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டா பக்கத்தில் படப்பிடிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்து, “ மகாலட்சுமி கதாபாத்திரத்துக்காக நன்றி வெற்றிமாறன் சார். தற்போது திரையரங்குகளில் விடுதலை -2” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, வெற்றிமாறனின் அசுரன் படத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT