செய்திகள்

சப்த சாகரதாச்சே எல்லோ இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார்!

பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் அடுத்தப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

DIN

சமீபத்தில் கன்னடத்தில் சப்த சாகரதாச்சே எல்லோ- சைடு ஏ, சைடு பி என இரண்டு பாகங்களாக திரையரங்குகளில் வெளியான படம் நல்ல வரவேற்பினை பெற்றன. 

தொடர்ந்து ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பின் இந்திய அளவில் இப்படம் கவனம் ஈர்த்துள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த இயக்குநர் ஹேமந்த் ராவ் இயக்கத்தில் சிவராஜ் குமார் இணைந்து நடிக்கவிருக்கிறார். 

இது குறித்து இயக்குநர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “இந்தப் படம் அறிவியல் புனைவு என தகவல்கள் சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது. அதெல்லாம் இல்லை. இது ஆக்‌ஷன் திரைப்படம்தான். ரசிகராக அவரது படங்களை பார்த்து வளர்ந்த எனக்கு அவரை புதிய கதாபாத்திரத்தில் பார்க்க ஆசை. இந்தப் படத்தில் நடிக்க அவரும் ஆர்வமாக இருக்கிறார்” எனக் கூறியுள்ளார். 

வரலாற்று திரைப்படமாக இருக்குமெனவும் 2025இல் இந்தப் படம் வெளியாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழில் வெளியான ஜெயிலர், கேப்டன் மில்லர் படங்களில் சிவராஜ் குமாருக்கு தமிழ், கன்னட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT