முகப்பு
செய்திகள்

மலையாளத்தில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப்!

இயக்குநர் அனுராக் காஷ்யப் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 11:03 AM
பகிர்:

ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முதற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளது.

இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘ராமன் ராகவ்’, ’பிளாக் ஃப்ரைடே’ ஆகிய படங்கள் விமர்சகர்களால் பாராட்டுக்களைப் பெற்றது. தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். லியோவிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவரது அடுத்த படமான ‘கென்னடி’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அனுராக் காஷ்யப் தமிழில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாகவும் இப்படத்தில் நாயகனாக ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில், மலையாளத்தில் இயக்குநர் ஆசிக் அபு இயக்கத்தில் உருவாக உள்ள ’ரைஃபிள் கிளப்’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்க அனுராக்  ஒப்பந்தமாகியுள்ளார். இதுவே, அவரது முதல் மலையாளப் படமாகும். முக்கியக் கதாபாத்திரங்களில் நடிகர்கள் சௌபின் சாகிர், திலீஷ் போத்தன் ஆகியோர் நடிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →