திருமகள் தொடரின் மூலம் பிரபலமான நடிகை நிவேதிதாவுக்கு விவாகரத்தாகி 3 ஆண்டுகளான நிலையில், திருமகள் தொடர் நாயகனுடன் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
வாணி ராணி, திருமகள், கல்யாணபரிசு உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் நன்கு அறியபட்டவர் நடிகை நிவேதிதா. இவர் திருமகள் தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு மகராசி தொடர் நாயகன் ஆர்யனுடன் திருமணம் நடைபெற்றது.
பின்னர், கருத்துவேறுபாடு காரணமாக நிவேதிதா - ஆர்யன் பிரிந்த நிலையில், திருமகள் தொடரில் நடிக்கும்போது அத்தொடரின் நாயகன் சுரேந்தர் உடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.
இது குறித்து நிவேதிதா, சுரேந்தர் உடன் காதலில் இருப்பதாக சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்டாகிராமில் முன்னதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், நிவேதிதா - சுரேந்தருக்கு உற்றார் உறவினர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.