லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை! விசாரணை ஒத்திவைப்பு!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழின் முன்னணி இயக்குநராக உள்ளார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அவர் அளித்த மனுவில், “லியோ படத்தில் அதிக வன்முறை இருப்பதால் படத்தை ஊடகங்களில் ஒளிபரப்புவதைத் தடை செய்ய வேண்டும். லோகேஷ் கனகராஜ் தன் திரைப்படங்களில் போதைப்பொருள் வியாபாரம், அதிக ஆயுதங்கள், பெண்களைக் கொல்வது போன்ற சமூக விரோதக் கருத்துக்களை அதிகம் காட்சிப்படுத்தியிருப்பதால் லோகேஷுக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: நடனமாடி புத்தாண்டைக் கொண்டாடிய அஜித்!
இந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பட்டது. ஆனால், இந்த மனு லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.