மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரரும் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் கவனம் பெற்றார் சிவ ராஜ்குமார். இவரது கோஸ்ட் படம் சமீபத்தில் வெளியானது.
நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜன. 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதையும் படிக்க: தனுஷ் நடிப்பைப் பார்த்து மிரண்ட பிரியங்கா மோகன்!
இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து நேர்காணல் ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கூறியதாவது:
என்னுடைய 100வது படத்துக்கு விஜய் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரது படங்கள் மிகவும் பிடிக்கும். விஜய்யிடம் புதிய ஸ்டைல் இருக்கிறது. அவர் ஒரே இரவில் நட்சத்திர நடிகராகவில்லை. மிகவும் கடினமாக உழைத்து எவ்வளவோ போராடித்தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். தனது நடிப்பு, தோற்றம், பேச்சு, படங்கள் தேர்வு என தன்னையே மெருகேற்றிக்கொண்டவர் நடிகர் விஜய். இந்த விஷயங்கள் மிகவும் பிடிக்கும்.
இதையும் படிக்க: ரசிகரின் செல்போனை பறித்து விடியோவை நீக்கிய அஜித்குமார்!
மாணவர்களின் கல்விக்காக உதவுவதை பல விடியோக்களில் நான் பார்த்திருக்கிறேன். அது எனக்கு மிகவும் பிடித்தது. விஜய் பற்றிய நல்ல விஷயமாக இதை நான் பார்க்கிறேன்.
அரசியல் குறித்து அவருக்கு கணிப்பு இருக்கிறது. மக்களை விஜய் நம்புகிறார்; மக்களும் அவரை நம்புகிறார்கள். பொதுவாக மக்கள் நடிகர்கள் ஏன் தனது தொழிலை விட்டு அரசியலுக்கு வருகிறார்கள் எனக் கேட்பார்கள். ஆனால், விஜய் விஷயத்தில் மக்கள் வரவேற்கிறார்கள். விஜய்யிக்கு அந்த வசீகரம் இருக்கிறது எனப் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.