முகப்பு
செய்திகள்

டெஸ்ட் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர்கள் மாதவன், சித்தார்த் நடிப்பில் உருவாகும் டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:10 PM
பகிர்:

டெஸ்ட் படத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒய்நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படம் கோடை வெளியீடாக திரைக்கு வர உள்ளது. விரைவில், இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →