கார்லோஸ் அல்கராஸுக்காக ஆவேஷம் படத்தின் பாடலை வெளியிட்ட விம்பிள்டனின் பதிவு இணையத்தில் வைரல்.
ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த படம் ஆவேஷம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஃபஹத்தின் நடிப்பால் வெற்றிப்படமானது.
இசையமைப்பாளர் சுஷின் ஷியாமின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் கவனம் பெற்றது. குறிப்பாக, இலுமினாட்டி பாடலின் இசையும் வரிகளும் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. கிரிக்கெட் பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு நடன்மாடினார்கள்.
இப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதுவே, நடிகர் ஃபஹத் ஃபாசிலின் அதிகம் வசூலித்த படமாகும். தற்போது புஷ்பா 2, வேட்டையன் உள்பட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஃப்கத் ஃபாசில்.
தற்போது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்தமுறை விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் பெற்ற கார்லோஸ் அல்கராஸுக்காக விம்ப்ள்டன் நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் ஆவேஷ்ம பட பாடலை எடிட் செய்து, “அல்கராஸ் ரசிகர்களே ஹேப்பி அல்லே” எனப் பதிவிட்டு இருந்தது.
இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இன்றளவும் கமெண்ட்டுகள் செய்து வருகிறார்கள். 1,61,426 லைக்ஸ் பெற்றுள்ளது. 6.3 மில்லியன் (63 லட்சம்) பார்வையாளர்களைத் தாண்டியுள்ளது.
3ஆவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள அல்கராஸ் கோப்பையை தக்க வைப்பதில் ஆர்வமுடன் இருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.