மூக்குத்தி அம்மன் 2 
செய்திகள்

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2! இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இல்லையா?

நடிகை நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உருவாகுமென தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.

DIN

அம்மன் வேடத்தில் பிரபல நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் - மூக்குத்தி அம்மன். இப்படத்தை ஆர்ஜே பாலாஜியும் என்ஜே சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார்கள். 

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார். ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கிரிஷ் இசையமைத்துள்ள இப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து இந்தப் படத்தினை தயாரிக்கிறார்கள். இதில் நயன்தாரா நடிக்கிறார். மற்ற விவரங்கள் எதுவும் படக்குழு வெளியிடவில்லை.

ஆர்ஜே பாலாஜி இயக்குநராக அல்லாமல் வேறு யார் இயக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நயன்தாரா டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடண்ட்ஸ் (மலையாளம்) ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். ஆர்ஜே பாலாஜி கடைசியாக சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT