முகப்பு
செய்திகள்

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநர் மீது ‘மீ டூ’ குற்றச்சாட்டு!

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் பாலியல் தொல்லை அளித்ததாக நடிகை குற்றம் சாட்டியுள்ளார்.

Updated On : 10 மார்ச், 2024 at 12:22 PM
பகிர்:


கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மஞ்ஞுமல் பாய்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, உலகளவில் ரூ.120 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுடன் 400 திரைகளுக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை அடைந்திருக்கிறது மஞ்ஞுமல் பாய்ஸ்.

இப்படத்தின் இயக்குநர் சிதம்பரத்தைப் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

இச்சூழலில், சிதம்பரம் இயக்கிய முதல் படமான, ‘ஜான். ஈ. மேன்’ திரைப்படத்தில் நடித்த நடிகை பிராப்தி எலிசபெத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இயக்குநர் சிதம்பரம் ஜான். ஈ. மேன் படத்தில் நடித்தபோது என்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார் என்றும் வாட்ஸ்ஆப்பில் ஒரு குழுவையே ஆரம்பித்து குறுஞ்செய்திகளை அனுப்புவார் என்றும் பதிவிட்டுள்ளார். இன்னொரு காமெண்டில், “எனக்கு சம்பளம் கொடுத்தது என் வேலைக்காகவா அல்லது பாலியல் சீண்டலுக்காகவா” எனக் கேட்டுள்ளார்.

இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும் இயக்குநர் சிதம்பரத்துக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். காரணம், ஜான்.ஈ.மேன் வெளியாகி 3 ஆண்டுகள் கழித்து மஞ்ஞுமல் பாய்ஸ் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற பின்புதான் ’மீ டூ’ குற்றச்சாட்டை வைப்பீர்களா? என பிராப்தியைக் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

பிராப்தி எலிசபெத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.