பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 குழுவுடன் நடிகர் கார்த்தி 
செய்திகள்

வந்தியத்தேவனுடன் பிஎஸ் -2 குழு! இது பொன்னியின் செல்வனல்ல, பாண்டியன் ஸ்டோர்ஸ் -2

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் அண்ணன் - தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்டது.

DIN

பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரில் நடித்துவரும் குழுவினரை நடிகர் கார்த்தி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கார்த்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளத்திலும் பகிர்ந்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் ஸ்டாலின் முத்து, நிரோஷா, விஜே கதிர்வேல் கந்தசாமி, வசந்த், ஆகாஷ், ஷாலினி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் அண்ணன் - தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்டது. 5 ஆண்டுகள் வரை ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து தந்தை - மகன்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தொடரின் படபிடிப்பு தளத்தில் சினிமா நடிகர் கார்த்தி வருகை புரிந்து, நடிகர்களை பாராட்டியுள்ளார். சினிமா படப்பிடிப்பு நடந்தபோது தற்செயலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களை சந்தித்துள்ளார்.

மேலும் கார்த்தியுடன் நடிகர்கள் ஸ்டாலின் முத்து, ஆகாஷ், ராஜ்குமார், ஷாலினி உள்ளிட்ட பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இப்படம் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT