முகப்பு
செய்திகள்

சசிகுமார் இயக்கத்தில் நயன்தாரா?

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாகத் தகவல்.

Updated On : 27 மார்ச், 2024 at 10:55 AM
பகிர்:

இயக்குநராக முத்திரை பதித்த சசிகுமார், நடிகராகவும் நல்ல கதையம்சமுள்ள படங்களில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். சில படங்கள் தோல்வியடைந்தாலும் சசிகுமாரைத் தேடிச் செல்லும் கதைகள் குறையவில்லை.

இறுதியாக, சசிகுமார் நடித்த ‘அயோத்தி’ பெரிய வெற்றியைப் பெற்றதுடன் வசூலிலும் அசத்தியது. தொடர்ந்து, சில படங்களில் நடித்து வருகிறார். நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் நந்தன் திரைக்கு வர காத்திருக்கிறது.

மேலும், சசிகுமார் குற்றப் பரம்பரை நாவலை இணையத் தொடராக இயக்கும் பணிகளில் இருக்கிறார்.

இந்த நிலையில், பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு கதையை நடிகை நயன்தாராவிடம் சசிகுமார் சொன்னதாகவும் அது பிடித்ததால் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, நயன்தாரா மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →